மஹாராஷ்டிரா தலைநகர் மும்பையில் இருக்கும் மீரா-பயாந்தார் பகுதியில் நீரஜ் யாதவ் என்ற சிறுவன் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது சைக்கிளில் சாகசம் செய்தபடி சென்ற சிறுவன் எதிர்பாராதவிதமாக சாலையோர சுவரில் மோதி படுகாயம் அடைந்தான். சிறுவன் தலையில் இருந்து ரத்தம் கொட்டியது.

உடனே அக்கம் பக்கத்தினர் சிறுவனை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே சிறுவன் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.