குஜராத் மாநிலத்தில் மெக்ஸானா என்ற பகுதியில் ஸ்பர்ஸ் வில்லா சொசைட்டி அமைந்துள்ளது. இங்கு திஷா பட்டேல் என்ற சிறுமி பெற்றோருடன் வசித்து வருகிறார். இவர் சம்பவ நாளில் சைக்கிள் ஓட்டிக் கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக ஒரு கார் வந்தது. அந்தக் காரை பார்த்தவுடன் திடீரென சிறுமி சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார்.

இதனைப் பார்த்து ஓட்டுனர் சுதாகரித்துக் கொள்வதற்குள் கார் சிறுமி மீது ஏறியது. அதன்பின் அவர் காரில் இருந்து இறங்கி வந்த நிலையில் திரும்பி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டார். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.. மேலும் இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.