
இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினந்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்ற வருகிறது. குறிப்பாக சைபர் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில் சைபர் தாக்குதல்களில் முதல் ஐந்து இடங்களில் இந்தியாவும் இருப்பதாக சர்வதேச செய்திகள் தகவல் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் குறுகிய காலத்தில் லட்சக்கணக்கான சைபர் குற்றங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன என்று கூறப்படுகிறது. மத்திய ஆண்டு சைபர் பாதுகாப்பு அறிக்கையில் இந்தியா முதல் ஐந்து இடங்களில் இருப்பதாக ஜப்பானிய ஐடி பாதுகாப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த ஆண்டு சுமார் 90,945 சைபர் குற்றங்கள் கண்டறிதல் நடந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் ஆன்லைன் பேங்கிங் மூலம் குற்றம் கண்டறிதல் இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.