உலகில் விலை உயர்ந்த வண்டு குப்பையில் வாழ்கிறது. ஆனால் அதன் விலை சொகுசு காரை விட உயர்ந்தது. பூமியில் பல விலங்குகள் மற்றும் பூச்சிகள் உள்ளது. அதில் சில உணவாக உண்ணப்படுகின்றது. சில உயிருக்கு ஆபத்தானவை. ஆனால் ஒரு பூச்சி தான் உலகிலேயே விலை உயர்ந்தது. குப்பையில் வசிக்கும் இந்த வண்டை ஜப்பான் நாட்டு வளர்பாளர் இளநகை பணமதிப்பில் கிட்டத்தட்ட மூன்று கோடிக்கு விற்பனை செய்து உள்ளார்.

எந்த காரணமும் இல்லாமல் இவ்வளவு பணம் கொடுத்து இந்த பூச்சியை வாங்க முடியாது. இந்த விலை உயர்ந்த வண்டுக்கு stag beetle என்று பெயர். இந்த வண்டுகள் அழுகும் மரத்தை விரும்பி சாப்பிடுகின்றன. ஆறு கிராம் எடையும் 7 ஆண்டு வரை உயிர் வாழும் தன்மை கொண்டது. இது அதிர்ஷ்டத்தை தரும் எனவும் அதை வைத்திருந்தால் கோடீஸ்வரர் ஆகி விட முடியும் என்றும் சிலர் நம்புவதே காரணம் என சொல்லப்படுகிறது.