
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நாகசைதன்யா. இவர் பிரபல நடிகர் நாகார்ஜுனாவின் மகன் ஆவார். இவர் தெலுங்கு சினிமாவில் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான ஜோஷ் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இந்தப் படத்தை தொடர்ந்து பல வெற்றி படங்களில் அவர் நடித்துள்ளார்.
இந்நிலையில் நடிகர் நாக சைதன்யாவிடம் பிஎம்டபிள்யூ, பென்ஸ் உள்ளிட்ட ஏராளமான சொகுசு கார்கள் இருக்கும் நிலையில் தற்போது அவர் புதிதாக ஒரு சொகுசு காரை வாங்கியுள்ளார். அதன்படி இவர் தற்போது போர்சி 911 ஜிடி3 ஆர்எஸ் என்ற சொகுசு காரினை வாங்கியுள்ளார். இந்த காரின் விலை ரூ.3.5 கோடி ஆகும். மேலும் இந்த காரை நடிகர் நாக சைதன்யா ஓட்டி செல்லும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.