
வேலூர் மாவட்டம் கே வி குப்பம் பகுதியில் 31 வயது மாற்றுத்திறனாளி பெண் வசித்து வருகிறார். இவருக்கு காது கேட்காது. வாய் பேசவும் முடியாது. நேற்று முன்தினம் அந்த பெண்ணின் பெற்றோர் ஒரு விசேஷ வீட்டிற்கு சென்றனர். இதனையடுத்து இரவு வீட்டிற்கு திரும்பி வந்தபோது மகள் சோர்வாகவும், கவலையுடனும் இருப்பதை பார்த்து என்னவென்று விசாரித்தனர். அதற்கு அந்த பெண் சைகை மூலம் நடந்தவற்றை கூறி அழுதுள்ளார். அந்த பெண்ணின் உறவுக்காரரான விஷால்(21) என்பவர் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார்.
அந்த பெண் எவ்வளவோ தடுக்க முயற்சி செய்தும் முடியாததால் அங்கேயே மயங்கி விழுந்துவிட்டார். அதன் பிறகு இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு விஷால் அங்கிருந்து தப்பி ஓடியதாக சைகை மூலம் கூறியுள்ளார். விஷாலுக்கு பெற்றோர் இல்லை. இதனால் மாற்றுத்திறனாளி பெண்ணின் பெற்றோர் விஷாலை தங்களது சொந்த மகன் போல வளர்த்து வந்தனர். இதுகுறித்து இளம்பெண்ணின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விஷாலை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.