ஐபிஎல் தொடரின் மும்பையில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதியது. இதில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி மும்பை வீரர்களை தாக்குப் பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கட்டை இழந்தது. கடைசியாக பேட்டிங் செய்த மும்பை 12.5 ஓவரில் இரண்டு விக்கெட்டை இழந்து 121 ரன்கள் எடுத்து எட்டு விக்கெட்  வித்தியாசத்தில் அபாரமாக வென்றது.

இந்த நிலையில் இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்ற பிறகு மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியா அளித்துள்ள பேட்டியில், வெற்றி பெற்றது மிக மகிழ்ச்சியாக உள்ளது. சொந்த மண்ணில் நடைபெறும் ஆட்டத்தில் ஒரு குழுவாக அனைவரும் ஒத்துழைத்த விதத்தை பார்க்கும்போது இந்த வெற்றி உண்மையிலேயே மகிழ்ச்சியாக உள்ளது . எங்கள் அணையில் ஒரு வீரரை தேர்ந்தெடுப்பது மிகவும் சவால் ஆனது. இந்த ஆடுகளத்தை பொருத்தவரை அஸ்வனி குமார் சிறப்பாக பந்த வீச முடியும் என்று நினைத்தோம்.  முதலில் இதன் அடிப்படை அனைத்துமே மும்பை ஸ்கவுட்களால் ஆனது” என்று கூறியுள்ளார்.