
மக்களவைத் தேர்தல் நடத்தை விதிகளை காரணம் காட்டி ஏப்ரல் மாதம் முதல் துவரம் பருப்பு பாமாயில் போன்றவை ரேஷன் கடைகளில் வழங்கப்படவில்லை. ஜூன் மாதம் சேர்த்து வழங்கப்படும் என்று அரசு அறிவித்து இருந்த நிலையில் இன்னும் வழங்கப்படாததால் எப்போது வழங்கப்படும் என்று அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் உள்ள ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு சிறப்பு பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட வேண்டிய துவரம் பருப்பு , பாமாயில் போன்றவை தொடர்ந்து மூன்று மாதமாக ஜூன் மாதத்திலும் வழங்கப்படவில்லை.
இதனை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது. இந்த விஷயத்தில் காட்டப்படும் அலட்சியம் கடுமையாக கண்டிக்கத்தக்கது. பெரும்பாலான நடுத்தர மற்றும் ஏழை குடும்பங்களால் வெளிச்சந்தையில் அவ்வளவு விலை கொடுத்து வாங்க முடியாத நிலையில் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பொருட்கள் மக்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் என்று கூறியுள்ளார்.