பிரிட்டன் நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் 20 வருடங்களாக சிமெண்ட், கல், மண் ஆகியவற்றை திண்பண்டமாக சாப்பிட்டு வந்துள்ளார். பாட்ரிஸ் பெஞ்சமின் ராம்க்லோம் என்ற பெண் 18 வயதில் மணல், சிமெண்ட் மற்றும் செங்கற்களின் பாகங்களை சாப்பிடும் பழக்கத்திற்கு  அடிமையாகியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், இது தனக்கு சந்தோஷத்தை கொடுப்பதாகவும், உடலுக்கு தீங்கு என தெரிந்தாலும் இந்த பழக்கத்திலிருந்து மீண்டு வர முடியவில்லை எனவும் வேதனை தெரிவித்துள்ளார். இவ்வகையான நோய் PICA என அழைக்கப்படுகிறது. இந்த சிமெண்ட் மற்றும் செங்கல் உண்ணும் பழக்கத்தை கைவிடுமாறு மருத்துவர் அறிவுறுத்தியதோடு நோயாளிக்கு மருந்துகளையும் பரிந்துரைத்துள்ளனர்.