
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தாராபுரம் பகுதியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் ஒருவர் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். அவருக்கு 46 வயது ஆகிறது. இவருக்கு மனைவி மற்றும் 12 வயதில் மகள் உள்ளனர். கடந்த 4 ஆண்டுகளாக தனது மகளுக்கு அந்த நபர் பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். சமீபத்தில் அந்த சிறுமி படிக்கும் பள்ளியில் பாலியல் குற்றங்களுக்கு எதிரான போக்சோ சட்டம் பற்றி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அப்போது தனக்கு நடந்த கொடுமை பற்றி சிறுமி ஆசிரியரிடம் கூறியுள்ளார்.
இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த ஆசிரியை சிறுமியின் தாயை வரவழைத்து நடந்த விஷயத்தை கூறியுள்ளார். அதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய் தாராபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தனது கணவர் மீது புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் தனியார் நிறுவன ஊழியரான அந்த சிறுமியின் தந்தையை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.