
அமெரிக்காவில் உள்ள வில்மிங்டன் பகுதியில் செயின்ட் மேரி மேக்டலின் பள்ளி அமைந்துள்ளது. இங்கு ஆசிரியராக அலேனிஸ் பினியன் (24) என்பவர் வேலை பார்த்து வந்துள்ளார். இவர் தன்னிடம் படிக்கும் மாணவர்களுடன் சமூக வலைதளங்களில் உரையாடுவது வழக்கம். அப்போது ஒரு மாணவனுக்கு அவர் ஆபாச புகைப்படங்களை அனுப்பியதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக அந்த மாணவரின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அந்த புகாரின் படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஆசிரியரை கைது செய்தனர். மேலும் கைது செய்யப்பட்ட ஆசிரியர் ஒப்பந்த அடிப்படையில் தான் சேர்க்கப்பட்டதாகவும் தற்போது அவர் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டு விட்டதாகவும் பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதோடு குழந்தைகளின் பாதுகாப்பில் மிகவும் கவனமாக தாங்கள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.