உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள மொரதாபாத் பகுதியில் டெல்லி செல்லும் சாலை உள்ளது. இங்கு ஒரு காதல் ஜோடி பைக்கில் சென்று கொண்டிருந்தனர். அவர்கள் பைக்கில் செல்லும்போது டேங்கில் அந்த பெண் அமர்ந்திருந்தார். வாலிபர் பைக்கை ஓட்டினார். இதனை அவர்களுக்கு பின்னால் காரில் சென்ற நபர் வீடியோவாக பதிவு செய்துள்ளார்.

அந்தப் பெண் பைக் டேங்கில் அமர்ந்து கொண்டே வாலிபரை கட்டிப்பிடித்து சில்மிஷம் செய்துள்ளார். அவர்கள் பைக்கில் செல்லும்போது இப்படி நடு ரோட்டில் ரொமான்ஸ் செய்து கொண்டே சென்ற வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி கண்டனங்களை ‌ குவித்தது. மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தற்போது அந்த இருசக்கர வாகன ஓட்டியை வலை வீசி தேடி வருகிறார்கள்.