
பீகார் மாநிலத்தில் உள்ள பூர்ணியா பகுதியில் நடந்த ஒரு சம்பவம் மிகவும் அதிர்ச்சிகரமானதாக அமைந்துள்ளது. அதாவது 30 வயதுடைய மாடரு ரிஷி என்பவர் ஒரு ஆட்டை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்துள்ளார். இது பற்றி அந்த ஆட்டின் உரிமையாளர் கூறும் போது, தன்னுடைய வீட்டின் முன்பாக அவர் ஆட்டை கட்டி வைத்திருந்த நிலையில் மது போதையில் வந்த ரிஷி பலவந்தமாக ஆட்டை அவிழ்த்துவிட்டு அங்கிருந்து சென்றார். சுமார் 500மீ தூரமுள்ள சோள காட்டிற்கு அவர் ஆட்டை அழைத்து சென்றார்.
அங்கு சென்று பார்த்த போது வயல்வெளிக்குள் வைத்து ரிஷி ஆட்டை பலாத்காரம் செய்தார். அதோடு ஆட்டை அவர் கொலையும் செய்து விட்டார். உடனடியாக ரிஷியை அவர் பிடித்ததோடு கத்தி கூச்சலிட கிராம மக்கள் அங்கு வந்தனர். மேலும் இதைத்தொடர்ந்து ரிஷியை போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைக்க காவல்துறையினர் அவரை கைது செய்தனர். அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்வதற்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.