
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தற்போது சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்திற்கு வாழ்த்து தெரிவித்து ஒரு எக்ஸ் பதிவை போட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், சென்னை பத்திரிகையாளர் மன்றத்திற்கு 25 ஆண்டுகளுக்குப் பிறகு தேர்தல் நடத்தப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள புதிய நிர்வாகிகள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
ஜனநாயகத்தின் நான்காவது தூண்களாக பத்திரிகையாளர்கள் இருக்கும் நிலையில் அவர்களின் உரிமைகளை பாதுகாத்து என்றும் நடுநிலையுடன் ஊடகாரத்தை போற்றி புதிய நிர்வாகக் குழு வெற்றிகரமாக செயல்பட வாழ்த்துகிறேன் என்று பதிவிட்டுள்ளார். மேலும் சமீபத்தில் சென்னை பத்திரிகையாளர் மன்றத்திற்கு 25 வருடங்களுக்கு பிறகு தேர்தல் நடத்தப்பட்ட நிலையில் தற்போது புதிய குழு தேர்வு செய்யப்பட்டுள்ளதால் அவர்களுக்கு நடிகர் விஜய் வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார்.
சென்னை பத்திரிகையாளர் மன்றத்துக்கு (Chennai Press Club) 25 ஆண்டுகளுக்குப் பிறகு தேர்தல் நடத்தப்பட்டு, தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள புதிய நிர்வாகிகள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள். ஜனநாயகத்தின் நான்காவது தூணாகிய பத்திரிகையாளர்களின் உரிமைகளைப் பாதுகாத்து, என்றும் நடுநிலையுடன் ஊடக…
— TVK Vijay (@tvkvijayhq) December 17, 2024