ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நேற்று பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தியதில் 29 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த பயங்கர தாக்குதலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அறிந்ததும் அமைச்சர் அமித்ஷா உடனடியாக ஸ்ரீ நகருக்கு விரைந்து சென்று உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பஹல்கான் பகுதியில் இன்னும் 4 முதல் 6 பயங்கரவாதிகள் பதிவு உள்ளதாக தகவல் வெளியானதால் மலைப்பகுதிகளில் ஹெலிகாப்டர் உதவியுடன் தேடுதல் வேட்டை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

தாக்குதல் நடத்தியவர்கள் என சந்தேகப்படும் நபர்களின் வரைபடங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அஷிப் பௌஜி, சுலைமான் ஷா, அபுத் தல்ஹா ஆகியோ தாக்குதலில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மொத்தம் 6 பேர் தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் நிலையில் 3 பேரும் விவரங்கள் வெளியாகி உள்ளது.