
உத்தரகாண்ட் மாநிலம், ரிஷிகேஷின் ராம்ஜூலா என்ற பகுதியில் கடந்த சில நாட்களாக கால்நடைகள் அதிகமாக சாலைகளில் நடமாடுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும், பொது மக்களுக்கு காயங்கள் ஏற்படுவதாகவும் உள்ளூர் நிர்வாகத்திற்கு புகார் அளித்துள்ளனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சம்பவ நாளில் தெருவில் நின்று சண்டை போட்ட இரண்டு காளைகள் அப்பகுதியில் உள்ள ஜவுளி கடைக்குள் புகுந்தது. சண்டை போட்ட காளை மாடுகள் அங்கிருந்த 2 பெண்கள் மீது பாய்ந்தது. அந்த கடைக்குள் மிகவும் சிறிய பாதை இருந்ததால் அவர்களால் அங்கிருந்து தப்பிக்க முடியவில்லை. இதனால் அவர்கள் சத்தம் போட்டனர். சத்தத்தை கேட்டு அருகில் இருந்த வாலிபர்கள் கால்நடைகளை விரட்டி விட்டனர். இந்த சம்பவம் அந்த ஜவுளி கடையில் இருந்த சிசி டிவியில் பதிவாகி இருந்தது. இதைத்தொடர்ந்து அந்த வீடியோ இணையதளங்களில் பரவி வருகிறது. இதனால் நெட்டிசன்கள் இவ்வாறு திரியும் கால்நடைகளின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள்.
दो सांडों की लड़ाई में दोनों लड़कियों की जान पर बन आई। गनीमत रही दुकान में रखा सामान लड़कियों पर गिरा जिससे वो बच गईं,वीडियो ऋषिकेश में मुनिकिरेती राम झूले का है।
यहां के लोगों ने कई बार आवारा पशुओं की समस्या प्रशासन से की लेकिन कुछ हुआ नहीं।@pushkardhami @uttarakhandcops pic.twitter.com/TZHNo5tCPM— Naina Yadav (@NAINAYADAV_06) July 12, 2024