
வங்காளதேசத்தில் சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு வழங்கப்பட்ட இட ஒதுக்கீடுக்கு கட்டணம் தெரிவித்து மாணவர்கள் அமைப்பினர் நடத்திய போராட்டம் பெறும் கலவரமாக மாறுவதற்கு பிரதமர் ஷேக் ஹசீனா தன் பதவியை ராஜினாமா செய்துவிட்டு நாட்டை விட்டு வெளியேறினார். இதனால் ராணுவம் ஆட்சியை கைப்பற்றிய நிலையில் இடைக்கால அரசின் புதிய தலைவராக முகமது யூனிஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இருப்பினும் தொடர்ந்து அங்கு பதற்றம் நீடித்து வருகிறது.
இந்நிலையில் வங்கதேசத்தில் ஏற்பட்ட அதே நிலைமை இந்தியாவில் ஏற்படலாம் என்று காங்கிரஸ் கட்சி தலைவர் சல்மான் குர்ஷாத் கடந்த செவ்வாய்க்கிழமை கூறினார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மற்றொரு காங்கிரஸ் எம்பி சசி தரூர் வங்கதேசத்தில் கடந்த ஜனவரி மாதம் நடந்த தேர்தல் வெளிப்படைத்தன்மை இல்லாமல் நடந்தது என்று கூறினார். இதற்கு தற்போது ஜகதீப் தன்கர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அதாவது ராஜஸ்தான் உயர்நீதிமன்ற பவள விழாவில் ஜகதீபி தன்கர் கலந்து கொண்டார். அப்போது அவர் வங்கதேசத்தில் நடந்தது இந்தியாவில் நடக்கலாம் என்று ஒரு போலியான பிம்பத்தை உருவாக்க காங்கிரஸ் முயற்சிக்கிறார்கள் என்று கூறினார். மேலும் இந்த நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினராகவும் குடிமகனாகவும் இருந்து கொண்டு எப்படி உங்களால் இப்படி பேச முடிகிறது என்றும் கேள்வி எழுப்பினார்.