பிரபல WWE மல்யுத்த வீரரான ஜான் சீனா விரைவில் ஓய்வு பெற உள்ளதாக அறிவித்துள்ளார். 90S கிட்ஸ்களின் ஹீரோவாக திகழ்ந்த இவர் WWE- பதினாறு முறை சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார். தற்போது 47 வயதாகும் ஜான் சீனா 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெறும் ரெஸ்டல் மேனியா 41 போட்டியுடன் ஓய்வு பெற உள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இந்த போட்டி வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஏப்ரல் 20 ஆம் தேதி வரை நடைபெறும். கனடாவில் நடைபெறும் மணி இன் தி பென் போட்டியில் திடீரென்று வந்து ஓய்வை இவர் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.