
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் நடிப்பில் வெளியான துணிவு மற்றும் சார்பட்டா பரம்பரை உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தவர்தான் ஜான் கோகைன். இவரின் மனைவி பூஜா ராமச்சந்திரனுக்கு நேற்று குழந்தை பிறந்துள்ள நிலையில் அந்த குழந்தையின் புகைப்படத்தை பதிவு செய்து பெயரையும் வெளியிட்டுள்ளனர். இவர் பல திரைப்படங்களில் நடித்துவரும் நிலையில் மனைவி பூஜா ராமச்சந்திரன் ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இவர் சமீபத்தில் கர்ப்பமான போது பல போட்டோ சூட் புகைப்படங்களை பதிவு செய்தார்.. அதிலும் குறிப்பாக கர்ப்பமான நேரத்தில் டிகிரி உடையில் இருக்கும் போட்டோ சூட் புகைப்படங்களை பகிர்ந்திருந்தார். இந்நிலையில் இந்த தம்பதிகளுக்கு நேற்று ஆண் குழந்தை பிறந்துள்ளதாகவும் தங்கள் குழந்தையை இந்த உலகிற்கு வரவேற்பதாகவும் கூறி ஒரு பதிவை பகிர்ந்துள்ளனர்.
Here comes our little Boy 👦 to fill our hearts and lives with joy 😊 ❤️.
Welcoming " KIAAN KOKKEN" to the world 🌎 ✨️.
Thank you for all your love and prayers 🙏 ❤️ 💕 #oubabyishere #celebrationsbegin #babyboy pic.twitter.com/FWeTTsYKVi— John Kokken (@highonkokken) April 29, 2023