
ஸ்காட்லாந்தை சேர்ந்த பெண்மணி ஹீதர். இவர் மலை ஏறுபவர். இவர் இந்தியாவுக்கு வந்த நிலையில் ரிஷிகேஷ் நோக்கி சென்றார். இதற்காக அவர் டெல்லி விமான நிலையத்திற்கு வந்த நிலையில் அவரை திடீரென கைது செய்தனர். அதாவது இந்தியாவில் தடை செய்யப்பட்ட gps கருவியை எடுத்துச் சென்ற காரணத்திற்காக அவரை கைது செய்துள்ளனர்.
அதாவது அவரை பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை செய்த போது கார்மின் இன்ரீச் ஜிபிஎஸ் கருவி கண்டறியப்பட்டது. அதாவது இதனை பயங்கரவாதிகள் பயன்படுத்தியதாகவும் பாதுகாப்பு அச்சுறுத்தலாக இந்த கருவி கருதப்படுவதாலும் இதனை இந்தியா உட்பட கிட்டத்தட்ட 14 நாடுகள் தடை செய்துள்ளது. மேலும் அந்தப் பெண் தங்கள் நாட்டு தூதரகத்தை தொடர்பு கொண்டு உதவி கேட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.