தற்போது நாட்டில் AI என்ற தொழில்நுட்பங்கள் வளர்ச்சி அடைந்து வருகின்றன. இந்நிலையில் கூகுள் நிறுவனம் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மெஷின் லேர்னிங் மாடல்களை உருவாக்கம் செய்து கொண்டிருக்கிறது.தற்போது கூகுள் நிறுவனம் ஜிமெயில் அனுபவத்தை மேற்கொள்வதற்கான முயற்சியில் ஈடுபட்டு வரும் நிலையில் தொழில் ரீதியாக பயனாளர்கள் பலரும் ஜிமெயில் பயன்படுத்துவதால் மெஷின் லேர்னிங் மாடல் மூலமாக ஒரு சிறிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது.

அதன்படி ஜிமெயில் பக்கத்தில் நீங்கள் தேடும் செய்து உங்களது இன்பாக்ஸ் முதல் பக்கத்தில் காண்பிக்கப்படும் என்றும் பழைய தேடல்கள் அப்படியே ஹிஸ்டரி ஆக அதில் பதிவு செய்யப்படும் எனவும் கூகுள் தெரிவித்துள்ளது. அது மட்டுமல்லாமல் ஜிமெயிலுக்கான மொபைல் பயன்பாடு பயண இன்பாக்ஸ் பக்கத்தில் தேடும் போதெல்லாம் சிறந்த முடிவுகளை காண்பிக்கும் என்றும் மெஷின் லேர்னிங் மாதிரிகளை பயன்படுத்தி சிறந்த முடிவுகள் சேகரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.