ஐசிசி டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வரும் நிலையில் ஜூன் 29ஆம் தேதி போட்டி முடிவடைகிறது. இதைத்தொடர்ந்து இந்திய அணி ஜிம்பாவேக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் நிலையில் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட இருக்கிறது. இந்நிலையில் ஜிம்பாவே தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. அதன்படி இளம் வீரரான சுப்மன் கில் தலைமையில் இந்திய அணி களமிறங்க இருக்கிறது.

அதாவது நடப்பு ஐபிஎல் தொடரில் குஜராத் அணியின் கேப்டனாக செயல்பட்ட சுப்மன் கில் இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், யஷஷ்வி ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்க்வாட், அபிஷேக் ஷர்மா, ரிங்கு சிங், சஞ்சு சாம்சன், துருவ் ஜூரேல், நிதிஷ் ரெட்டி, ரியான் பார்க், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், ஆவேஷ் கான், கலீல் அகமது, முகேஷ் குமார், துஷார் தேஷ் பாண்டே ஆகியோர் அணியில் இடம் பெற்றுள்ளனர். மேலும் ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பலர் ஜிம்பாவே போட்டிக்கான அணியில் இடம்பெற்றுள்ள நிலையில் சென்னை அணியின் கேப்டனாக இருந்த ருதுராஜ் கெய்க்வாட் நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்திய அணிக்கு திரும்பியுள்ளார். இருப்பினும் இந்த அணியிலும் தமிழக வீரரான நடராஜன் இடம்பெறாதது கேள்விக்குறியை ஏற்படுத்தியுள்ளது.