
மத்திய பிரதேசத்தில் ஜிம்முக்குள் திருட முயன்ற இளைஞருக்கு ஜிம் உரிமையாளர் நூதன தண்டனை வழங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மத்திய பிரதேசம் மாநிலம் தாடியா மாவட்டத்தில் நவீன உடற்பயிற்சி மையம் இயங்கி வருகிறது. இந்த ஜிம் முழுவதும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்ட நிலையில் ஜிம்முக்குள் நடப்பவற்றை வீட்டில் இருந்து உரிமையாளர் தனது செல்போனில் கண்காணித்துக் கொண்டிருந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று இரவு ஜிம்முக்குள் திருடுவதற்காக வாலிபர் ஒருவர் நுழைந்துள்ளார்.
இதனை அறிந்த ஜிம் உரிமையாளர் உடனடியாக ஜிம்முக்கு சென்று திருடனை கையும் களவுமாக பிடித்து போலீசில் ஒப்படைத்தார். முன்னதாக அந்த ஜிம் உரிமையாளர் திருடனுக்கு நூதன தண்டனை வழங்க முடிவு செய்தார். அந்த திருடனை ஜிம்மில் உள்ள ட்ரெட்மிலில் ஓட வைத்தார். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.