அடுத்த சில மாதங்களில் ஜியோ, ஏர்டெல், VI தங்களது ப்ரீபெய்டு மற்றும் போஸ்ட் பெய்டு கட்டணத்தை உயர்த்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. எனவே இரண்டு சிம் கார்டுகளை வைத்திருப்பதற்கு இது பெரும் தலைவலியாக மாறக்கூடும். தற்போது ஜியோ, ஏர்டெல் மற்றும் விஐ ஐடியா சிம் கார்டுகளை செயலில் வைத்திருக்க குறைந்தபட்சம் 150 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்ய வேண்டும்.

ஆனால் கட்டண உயர்வுக்குப் பிறகு இதை 150 ரூபாய்க்கு பதிலாக 150 முதல் 200 ரூபாய் வரை இருக்கக்கூடும். இரண்டு சிம் கார்டுகளை பயன்படுத்தினால் குறைந்தபட்சம் 400 ரூபாய்க்கு மாதந்தோறும் ரீசார்ஜ் செய்ய வேண்டும் என தகவல் வெளியாகியுள்ளது.