இந்தியாவில் வாடிக்கையாளர்களுக்காக ஜியோ ஏர்ஃபைபர் கனெக்சன் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் பயணர்களுக்கு 1 ஜிபிபிஎஸ் அதிவேக டேட்டா வழங்கப்படும். தற்போது இந்த திட்டத்தில் சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. அதாவது 1199 ரூபாய் திட்டத்தில் பயனர்கள் சில கூடுதல் நன்மைகளை பெறலாம். அதன்படி இலவச நெட்ப்ளிக்ஸ், அமேசான் விலை, ஜியோ சினிமா ஆகியவற்றுடன் 14 ஓடிடி பயன்பாடுகளையும் பயனர்கள் அனுபவிக்க முடியும்.

அது மட்டுமல்லாமல் 1119 ரூபாய் மற்றும் அதற்கு மேல் பயனர்களுக்கு Netflix, JioCinema Premium மற்றும் Amazon Prime உடன் 14 OTT பயன்பாடுகளுக்கு இலவச சந்தா வழங்கப்படும். ரூ.999 திட்டத்தில் 150 mbps வேகத்தில் டேட்டா வழங்கப்படும் என்றாலும், Netflix மற்றும் JioCinema Premium சந்தா அதில் கிடைக்காது. மேலும்  ஜியோஃபைபர் மேக்ஸ் திட்டத்தில் ஜியோசினிமா பிரீமியம் சந்தாவுடன் நெட்ஃபிக்ஸ் மற்றும் அமேசான் பிரைம் சந்தா வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது .