தென் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழ்நாட்டில் சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன் பிறகு இன்று தமிழகத்தில் நீலகிரி, பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலூர், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், ஈரோடு, திண்டுக்கல், தேனி, திருப்பூர், கோவை மாவட்டம் மலைப்பகுதிகள் ஆகிய 14 மாவட்டங்களில் இன்று ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. மேலும் ஜூன் 3 மற்றும் 4 ஆகிய தேதிகளிலும் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால் வரும் நாட்களில் வெப்பத்தின் தாக்கம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.