
ஜிவி பிரகாஷ்-சைந்தவி விவாகரத்திற்கு காரணம் ஒரு நடிகை தான் என்று வைரலாக ஒரு விஷயம் பரவியது. இது குறித்து முதல் முறையாக ஜிவி பிரகாஷ் விளக்கம் கொடுத்துள்ளார். இவர் கடந்த வருடம் அவருடைய காதல் மனைவி சைந்தவியை விவகாரத்து செய்தார். இதற்கான காரணத்தை இருவரும் கூறவே இல்லை. இருந்தாலும் வேலை என்று வரும்போது இருவரும் சேர்ந்து தான் இருக்கிறார்கள். இருந்தபோதிலும் ஜிவி பிரகாஷ் சைந்தவியை விவகாரத்து செய்ததற்கு நடிகை திவ்ய பாரதி தான் காரணம் என்று பலரும் சமூக வலைதளங்களில் ட்ரோல் செய்து வந்தார்கள் . இந்த வதந்திக்கு முதன்முறையாக ஜிவி பிரகாஷ் விளக்கம் கொடுத்திருக்கிறார்.
அதாவது பொதுவாக பிரபலங்கள் என்று வரும்போது வதந்திகளுக்கு பஞ்சமே இருக்காது. அந்த வரிசையில் விவகாரத்தை அறிவித்த ஜிவி பிரகாஷ்-சைந்தவி இருவரும் கடுமையாக விமர்சிக்கப்பட்டார்கள். ஆனால் அவர்கள் இருவரும் அமைதியாக இருந்தார்கள். நண்பர்களாக வாழ்க்கையை தொடருவோம் என்றும் குறிப்பிட்டு அறிக்கையை பகிர்ந்தார்கள். இந்த நிலையில் கிங்ஸ்டன் படத்தின் ப்ரோமோஷன் வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் பேட்டி ஒன்றில் பேசிய ஜிவி பிரகாஷ் படத்தில் நடிக்கும் போது திவ்யபாரதியோடு சேர்ந்து நடித்தது தான் என்னுடைய மனைவியை பிரிய காரணம் என்று பேசி வந்தார்கள்.
ஆனால் அது உண்மை இல்லை. வெளியில் நாங்கள் பார்த்துக் கொண்டது கூட கிடையாது. இவ்வளவுதான் எங்களுக்கான உறவு. இதனை அடுத்து பேசிய திவ்யபாரதி, “ஜிவி பிரகாஷ் அவர்களோடு சேர்ந்து நடிப்பதால் தவறாக பேசினார்கள். எனக்கு “பிறை தேடும்” பாடல் மிகவும் பிடிக்கும். அழகான தம்பதிகள் அவர்களுக்குள் நான் வரவில்லை. என்னை குறிப்பிட்டு பேசாதீர்கள். இருந்தாலும் சில பெண்கள் சமூக வலைதளங்களில் ஏன் இப்படி பண்றீங்க? அவங்க செம ஜோடி தெரியுமா ? ஏன் நீங்க போய் இப்படி கெடுத்தீங்க? என்று கருத்துக்களை சொல்லுகிறார்கள் .நான் பார்த்துவிட்டு எதுவும் பதில் கொடுக்க மாட்டேன்” என்று கூறியிருந்தார்.