
ஜி-20 உச்சி மாநாட்டை ஓராண்டுக்கு நடத்தும் வாய்ப்பை இந்தியா பெற்றுள்ள நிலையில் நாட்டின் பல்வேறு நகரங்களில் மாநாடு நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு வெளிநாடுகளைச் சேர்ந்த குழுவினர் இந்தியாவிற்கு வருகை தருகின்றனர். அவர்கள் இந்திய பாரம்பரிய முறையில் மேளதாளங்கள் முழங்க, கலாச்சார நிகழ்ச்சிகள் நடத்தி வரவேற்கப்படுகின்றனர். இந்நிலையில் ஆக்ரா கோட்டையில் பொதுமக்களுடன் பேரரசர் ஜஹாங்கீர் உரையாடும் அரங்கான திவான்-இ-ஆம் சுவரின் மேற்கூரை பகுதியில் விரிசல் ஏற்பட்டிருக்கிறது. இந்த கோட்டையில் யுனெஸ்கோ அமைப்பு வழங்கிய வழிகாட்டு நெறிமுறைகளின் படி 40 டெசிபல் என அதிகபட்ச ஒளியளவு அனுமதிக்கப்பட்டுள்ளது.
ஆனால் கோட்டை வளாக பகுதிகளில் ஜி-20 குழுவினரை வரவேற்க நடத்திய லேசர் ஒலி மற்றும் ஒளி காட்சிகளுடன் கூடிய நிகழ்ச்சியின் காரணமாக இந்த அனுமதிக்கப்பட்ட ஒலி அளவைவிட அதிக சத்தம் எழுந்துள்ளது. அதன் காரணமாகவே இந்த விரிசல் ஏற்பட்டுள்ளது என பாரம்பரிய ஆர்வலர்கள் கூறியுள்ளனர். அந்த வகையில் இரண்டு முதல் ஆறு மில்லி மீட்டர் வரை மேற்கூரையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் பிளாஸ்டர் பூசுகளும் பெயர்ந்து உள்ளது. இந்நிலையில் கோட்டைக்குள் சுற்றுலா வாசிகள் பார்வையாளர்கள் யாரும் உள்ளே செல்லாதபடி தடுப்பான்களை அமைத்து தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.