
மகாராஷ்டிராவில், பிரிந்து சென்ற கணவரை கடத்தி, விவாகரத்து ஜீவனாம்ச தொகையை 15 லட்சத்திலிருந்து 20 லட்சமாக உயர்த்தி கேட்டு, அவரது மனைவி 3 மாதங்களாக சிறைபிடித்து வைத்திருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கணவரிடம், மனைவி கூடுதல் இழப்பீடு கேட்டுள்ளார் அதற்கு அவர் வழங்க இயலாது என கூறியதால், கோபம் கொண்ட மனைவி கணவரை கடத்தி பாழடைந்த கட்டடத்தில் அடைத்து வைத்து கொடுமைப்படுத்தியுள்ளார்.
இந்த சம்பவத்தில், கணவர் கடுமையாக துன்பத்திற்கு உள்ளான நிலையில், அவர் கடந்த சனிக்கிழமையன்று அங்கிருந்து தப்பி வந்து, காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். தனது மனைவியால் சுமார் 3மாதங்களாக சிறையில் அடைக்கப்பட்டிருந்ததாக , அவர் காவல்துறையில் புகார் செய்தார்.
அந்த புகாரின் அடிப்படையில், அவரின் மனைவி, மனைவின் சகோதரர் மற்றும் இதற்கு உடந்தையாக இருந்த 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றன.