புதுச்சேரி மாநிலத்தில் வீட்டு உபயோக மின் கட்டணம் வருகின்ற ஜூன் 16ஆம் தேதி முதல் உயர்த்தப்படுவதாக புதுச்சேரி மாநில அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி முதல் 100 யூனிட்டுக்கு 2.25 ரூபாய் முதல் 2.70 வரையும், 101 முதல் 200 யூனிட் வரை 3.25 முதல் 4 ரூபாய் வரையும் உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும் 201 யூனிட் முதல் 300 யூனிட் வரை 5.40 ரூபாயிலிருந்து யூனிட்டுக்கு 6 ரூபாயாக மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. 301 யூனிட்டுகளுக்கு மேல் யூனிட்டுக்கு 6.80 ரூபாயிலிருந்து 7.50 ரூபாயாக மின் கட்டணம் உயர்த்தப்படுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது.