
ஜூன் 4 நாங்கள் வெற்றி பெறுவது உறுதி என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உறுதியாக நாங்கள் வெற்றி பெறுவோம் என்றதை நம்புகிறோம். தஞ்சாவூர், கோயம்புத்தூர் மக்கள் எங்களுக்கு பெரிய அளவில் ஆதரவாளித்தார்கள் எங்களுக்கு அந்த பகுதியில் வெற்றி இருக்கும் என நம்புகிறோம். ஜூன் நான்காம் தேதி எங்களுடைய வெற்றி தனிப்பட்ட மனிதனுடைய வெற்றியாக இருக்காது.
தமிழகத்திற்காக உழைக்க வேண்டும் அதற்கான பங்களிப்பை செலுத்த வேண்டும் என்பதற்கான வெற்றியாக இருக்கும். அதே போல் மூன்றாவது முறையாக மோடி அவர்கள் வரும்போது, தமிழகத்தினுடைய 10 ஆண்டுகள் போல் இல்லாமல் அதிக எம்பிக்கள் இந்த ஆண்டு பாஜகா-வில் இருக்கும் போது வேகமாக பணி செய்ய வேண்டும் என்பதற்காக தான் இந்த வெற்றி என தெரிவித்துள்ளார்.