ஊழியர் வருங்கால வைப்பு நிதி உறுப்பினர்கள் நீண்ட நாட்களாக வட்டி தொகை தங்களுடைய கணக்கில் டெபாசிட்டாக காத்திருக்கிறார்கள். அத்தகைய வாடிக்கையாளர்களுக்கு EPFO முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது வட்டி பணம் ஜூலை மாதத்திற்குள் EPFO உறுப்பினர்களின் கணக்குகளை சென்றடையலாம். அதற்கான அதிகாரப்பூர்வ தகவலை நிதி அமைச்சகம் விரைவில் வெளியிட உள்ளது.

பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான இபிஎப்ஓ, மிக உயர்ந்த முடிவெடுக்கும் அமைப்பான மத்திய அறங்காவலர் குழு, நிதியாண்டு 2024க்கு 8.25 சதவீதம் வட்டி விகிதத்தை பிப்ரவரி மாதத்தில் அங்கீகரித்துள்ளது. ஆனால் நிதி அமைச்சகம் இன்னும் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை. பொதுத் தேர்தல் காரணமாக அது தாமதம் ஆனதால் தற்போது அந்த பணி ஜூலை மாதத்திற்குள் முடியும் என்று தகவல் வெளியாகி உள்ளது.