திரைப்படங்களில் நடித்துக்கொண்டே பின்னணியும் பாடி வருபவர் தான் நடிகை ஆண்ட்ரியா. இவர் சென்ற மாதம் கோலாலம்பூரில் ஒரு இசை நிகழ்ச்சியை நடத்தினார். இதையடுத்து ஜூலை 1-ஆம் தேதி கோவையில் ஆண்ட்ரியா லைவ் இன் கோவை எனும் பெயரில் ஒரு இசை நிகழ்ச்சி நடத்த போகிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது, முதல் முறையாக கோவையில் தனி இசை நிகழ்ச்சி நடத்தப் போகிறேன். வரும் ஜூலை 1-ஆம் தேதி மாலை 6 மணிக்கு இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இந்த இசை நிகழ்ச்சி 2 மணி நேரம் நடைபெறவுள்ளது. இளையராஜா முதல் பல இசையமைப்பாளர்களின் பாடல்களை பாட இருக்கிறேன். நான் பாடியதில் ஹூ இஸ் தி ஹீரோ, கூகுள் கூகுள், ஊ சொல்றியா மாமா உட்பட பல்வேறு பாடல்கள் ஹிட் அடித்துள்ளது. கடந்த 15 வருடங்களாக மியூசிக் படித்து வருகிறேன். அது தான் தற்போது என்னை பாட வைக்கிறது என்று ஆண்ட்ரியா கூறியுள்ளார்.