
சமூக ஊடகங்களுக்கு பாகிஸ்தான் அரசு தடை விதித்துள்ளது. அதன்படி பஞ்சாப் மாகாண முதல்வர் மரியம் நவாஸ் இன் அமைச்சரவை குழு , ஜூலை 13ஆம் தேதி முதல் ஜூலை 18-ஆம் தேதி வரை முஹர்ரம் பண்டிகையை முன்னிட்டு 6 நாட்களுக்கு யூடியூப், வாட்ஸ் அப், ட்விட்டர், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம், டிக் டாக் போன்ற அனைத்து சமூக ஊடக தளங்களையும் தடை செய்ய பரிந்துரை செய்துள்ளது.
திருவிழாவின் போது வெறுப்புணர்வை ஏற்படுத்தும் பேச்சுகளை கட்டுப்படுத்துவதற்கு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.