திருநெல்வேலி காங்கிரஸ் கிழக்கு மாவட்ட தலைவராக இருந்த ஜெயக்குமார் தனசிங் கடந்த 4ஆம் தேதியன்று பாதி உடல் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். தொடர்ந்து, இது கொலையா? அல்லது தற்கொலையா? என்ற கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், ஜெயக்குமார் தற்கொலை செய்திருக்கவே அதிக வாய்ப்பு இருப்பதாக போலீசார் கூறுகின்றனர். உடற்கூராய்விலும் தற்கொலை செய்திருப்பதற்கான வாய்ப்புகள் அதிக அளவு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருப்பதாகவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.