
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவர் ஜெயம் ரவி. இவர் மோகன் ராஜா இயக்கத்தில் வெளியான ஜெயம் என்ற படத்தின் மூலமாக கதாநாயகனாக அறிமுகமானார் .அதன் பிறகு தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்த இவர் கடந்த 2009 ஆம் வருடம் ஆர்த்தியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்து சுமார் 15 வருடங்கள் தம்பதிகளாக வாழ்ந்து வரும் இந்த தம்பதிகளுக்கு அழகிய இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இந்த நிலையில் ஜெயம் ரவி- ஆர்த்தி விவகாரத்து செய்ய போவதாக சமூக வலைதளத்தில் செய்தி வெளியாகிக் கொண்டிருக்கிறது.
இது குறித்து பல தகவல்கள் வெளியாகி வந்து கொண்டிருக்கும் நிலையில் ஜெயம் ரவி ஆதி தம்பதிகளுக்கு இடையே ஏற்பட்ட விவாகரத்திற்கு குஷ்புதான் காரணம் என்று பிரபல பத்திரிகையாளர் சபிதா ஜோசப் கூறியுள்ளார் . அதாவது, ஜெயம் ரவி அப்பாவுக்கு ஆர்த்தியை திருமணம் செய்வதில் விருப்பமில்லை. குஷ்பூவுக்கும் ஜெயம் ரவி மாமியாருக்கும் இடையே நல்ல நட்பு இருந்து வந்த நிலையில் இருவரும் திட்டமிட்டு பார்ட்டி ஒன்றில் ஆர்த்தியை ஜெயம் ரவி மீது தள்ளிவிட்டு காதலை உருவாக்கி உள்ளனர். ஜெயம் ரவி- ஆர்த்தி சேர்ந்ததற்கு குஷ்பு தான் முக்கிய காரணம் என்று கூறியுள்ளார்.