தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுக கட்சி தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருவது தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த முறை அதிமுக கட்சி 32 இடங்களில் போட்டியிட்ட நிலையில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை. கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல்தான் மறைந்த முதல்வர் ஜெயலலிதா சந்தித்த கடைசி தேர்தல் ஆகும். அந்த தேர்தலின் போது மோடியா இல்லனா இந்த லேடியா என்ற பிரச்சார முழக்கம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில் 38 இடங்களில் தனித்து நின்று அதிமுக வெற்றி பெற்றது.

அதுமட்டுமில்லாமல் 44 சதவீத வாக்குகள் பெற்று சாதனை படைத்தது. ஆனால் ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு நடந்த கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் தேனி தொகுதியில் மட்டுமே அதிமுகவுக்கு வெற்றி கிடைத்தது. ஆனால் இந்த முறை நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் ஒரு இடத்தில் கூட அதிமுகவால் வெற்றி பெற முடியவில்லை. இதற்கு காரணம் எடப்பாடி பழனிச்சாமி, சசிகலா, ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோரை கட்சியிலிருந்து வெளியேற்றியது தான் காரணம் என்று அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது. மேலும் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவின் தொடர் தோல்வி தொண்டர்கள் மத்தியில் கவலையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.