தமிழக பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வ பெருந்தகை மீது பல்வேறு குற்றசாட்டுகளை சுமத்தி இருந்தார். இதைத்தொடர்ந்து இன்றும் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை செல்வப் பெருந்தகை மீது பல்வேறு குற்றசாட்டுகளை சுமத்தியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, கடந்த இரு நாட்களுக்கு முன்பாக செல்வ பெருந்தகை அளித்த பேட்டியின் போது பாஜகவில் ரவுடிகள் இணைவதாக கூறினார். இதனால்தான் அவர் பற்றி கூற வேண்டிய சூழல் ஏற்பட்டது. கடந்த 1885 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட காங்கிரஸ் கட்சியில் இதுவரை குண்டர் சட்டத்தில் கைதாகி சிறையில் இருந்து வெளியே வந்த ஒருவர் மாநில தலைவராக இருந்ததில்லை.

அனைவருக்குமே ஆடிட்டர் பாண்டியன் கொலை வழக்கு தெரியும். இந்த வழக்கில் செல்வப் பெருந்தகையை கைது செய்யப் போனபோது அவர் குதித்து குதிகாலை உடைத்துக்கொண்டதும் அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான். இன்று பசு தோல் போர்த்திய புலி போன்ற நான் காந்தி வழியில் வந்தவன். நல்லவன் என்று கூறும்போது தான் அவர் மீதான வழக்குகளை எல்லாம் கூற வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. அவர் மீது குண்டன் சட்டம் போட்டது ஜெயலலிதா தான். ஆனால் தற்போது ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகதான் குண்டர் சட்டம் போட்டது என்று கூறுகிறார்கள். செல்வப் பெருந்தகை மீது பல வழக்குகள் இருக்கும் நிலையில் அவர் என்னை ரவுடி என்று கூறிவிட்டதால் நான் கோர்ட்டுக்கு செல்கிறேன் என்று கூறியுள்ளார். வாருங்கள் அதை பார்த்துக் கொள்ளலாம் என்று கூறினார்.