
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் 292 இடங்களில் வெற்றி பெற்று பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியமைக்க தயாராகி வருகிறது. இதனையடுத்து 234 இடங்களில் வெற்றி பெற்றுள்து இந்தியா கூட்டணி. இந்நிலையில் உத்தர பிரதேசத்தில் உள்ள ஒவ்வொரு ஏழைக் குடும்ப தலைவிகளுக்கும், ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வழங்குவதாக கூறி, வீடு வீடாக காங்கிரஸ் உத்தரவாத பிரசுரங்கள் வழங்கி இருந்தது.
உத்தர பிரதேசத்தில் மக்களவைத் தேர்தல் முடிவுகள் எதிர்பாராத திருப்பமாக காங்கிரஸ் கூட்டணிக்கு சாதகமாக அமைந்தது. இதனால், லக்னோவில் உள்ள பெண்கள் உத்தரவாத பிரசுரங்களுடன் காங்கிரஸ் அலுவலகத்திற்கு படையெடுத்து வருகின்றனர்.