
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நானி. இவர் நடிப்பில் அண்மையில் வெளியான ஹாய் நன்னா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட் ஆனது. இந்நிலையில் கடந்த 2019-ஆம் ஆண்டு நானி நடிப்பில் வெளியான ஜெர்சி திரைப்படம் வெளியாகி வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த படம் வெளியாகி 5 வருடங்கள் ஆன நிலையில் இப்படம் நேற்று திரையரங்குகளில் ரீ ரிலீஸ் ஆனது. இந்தப் படத்தை பார்ப்பதற்கு நடிகர் நானி தன்னுடைய குடும்பத்துடன் சென்றிருந்தார். அவர் தியேட்டரில் அமர்ந்து படம் பார்க்கும்போது ரசிகர்கள் கூட்டத்திற்கு மத்தியில் நடிகர் நானி யின் மகன் எழுந்து நின்று மிகவும் உற்சாகமாக காணப்பட்டான். மேலும் இது தொடர்பான வீடியோ தற்போது வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
#Nani son junnu and wife Anjana at Sudarshan 35MM To watch #Jersey ✨💥❤️ pic.twitter.com/Z5F1auVx5e
— Filmy Bowl (@FilmyBowl) April 20, 2024