
திமுக ஆட்சியில் மக்களுக்கு என்ன செய்தார்கள்…? எதுவுமே செய்யவில்லை என்று வி.கே. சசிகலா பரபரப்பு குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார். அதாவது அதிமுகவினரை மீண்டும் ஒன்றிணைக்கும் முயற்சியாக தென்மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார் சசிகலா .
அந்தவகையில் தென்காசியில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட சசிகலா, ஜெயலலிதா எந்த வெளிநாடும் போனது கிடையாது. ஆனால் இன்றைய முதல்வர் ஸ்டாலின் பல முறை வெளிநாடு செல்கிறார். நீங்க யார் கிட்ட வேணா ஏமாத்தலாம். ஆனா என்கிட்ட முடியாது என்று பேசியுள்ளார்.