ஓசூரில் பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்மூலம் பெங்களூரு செல்வோர் ஓசூர் விமான நிலையத்திற்கு வருவதற்கான அதிக வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது.  இந்த நிலையில் இது தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறுகையில், ஓசூரில் விமான நிலையம் அமைவது நிறைவேற்ற சாத்தியமே இல்லாதது.

இதுபோன்ற அறிவிப்புகளை வெளியிடுவது யாரை ஏமாற்றுவதற்காக? பெங்களூரில் இருந்து 150 கிலோமீட்டர் விமான நிலையம் அமைக்க முடியாது என்று ஏற்கனவே மத்திய அரசு கூறியுள்ளது. பேருந்துகளை கூட வாங்காத திமுக அரசு விமான நிலையம் அமைப்பதாக கூறுவது ஆகச்சிறந்த நகைச்சுவைதான் என்று கூறியிருக்கிறார்.