கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே கோட்ட விளை பகுதியில் ஜான் ஸ்டீபன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு மகன் மகள் ஆகியோர் இருக்கிறார்கள். இவர்களுடைய மகளுக்கு திருமணமான நிலையில் மகன் கோவையில் தங்கி படித்து வருகிறார். இதனால் கணவன் மனைவி மட்டும் இருவரும் வீட்டில் தனியாக இருந்த நிலையில் ஜான் ஸ்டீபன் நாட்டு வைத்தியம் செய்து வந்ததோடு வீட்டில் ஜோதிடமும் பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 8-ம் தேதி ஸ்டீபன் வீட்டில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடைந்துள்ளார். இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்ட நிலையில் அவர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் பிரேத பரிசோதனை அறிக்கையில் ஸ்டீபன் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இது தொடர்பாக காவல்துறையினர் நடத்திய தீவிர விசாரணையில் கலையரசி (45) மற்றும் நம்பிராஜன் (25) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இவர்களிடம் நடத்திய விசாரணையில் கலையரசி கணவனை பிரிந்து வாழ்ந்து வந்தது தெரிய வந்தது. தன் கணவருடன் மீண்டும் சேர்ந்து வாழ விரும்பிய கலையரசி ஸ்டீபனிடம் ஜோதிடம் பார்த்தார். அப்போது அவர் ஏதேதோ பரிகாரம் சொல்லாதே எல்லாம் அவர் செய்துள்ளார். அவர் அடிக்கடி பாரிகாரம் செய்தும் கணவருடன் சேர்ந்து வாழ முடியவில்லை. இதன் காரணமாக கொடுத்த பணத்தை திருப்பி தருமாறு கலையரசி கேட்டுள்ளார். ஆனால் அவர் தர மறுத்துவிட்டார். இதன் காரணமாக ஆத்திரத்தில் கூலிப்படையை ஏவி ஸ்டீபனைக் கொல்ல கலையரசி முடிவு செய்து  அதற்காக நம்பிராஜனை தொடர்பு கொண்டார். இதற்காக கலையரசி பணம் கொடுத்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து நுழைந்த நம்பிராஜன் ஸ்டீபனை தீர்த்து கட்டியது தெரியவந்தது. மேலும் இவர்களை காவல்துறையில் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.