
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சரவணம்பட்டியில் சட்டவிரோதமான செயல்கள் நடக்காத பொருட்டு போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் போலீசார் நடத்திய விசாரணையில் சர்வன் கிரி என்பவர் குட்கா பொருட்களை கொண்டு வந்து விற்பனை செய்தது தெரியவந்தது. அவர் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர். இதனால் தனிப்படை போலீசார் காரில் குட்கா கடத்தி சென்ற சர்வன் கிரியை மடக்கி பிடித்து சோதனை நடத்தினர். அப்போது காரில் 500 கிலோ குட்கா பொருட்கள் இருந்தது தெரியவந்தது.
அந்த 500 கிலோ குட்கா பொருட்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதனை அடுத்து சர்வன் கிரியிடம் நடத்திய விசாரணையில் பீளமேட்டைச் சேர்ந்த ராம்குமார் என்பவர் உடன் இணைந்து அவர் குட்கா பொருட்களை விற்பனை செய்தது தெரியவந்தது. இருவரையும் போலீசார் கைது செய்தனர். அது மட்டும் இல்லாமல் குடோனில் பதுக்கி வைத்திருந்த 10 லட்ச ரூபாய் மதிப்புள்ள குட்கா பொருட்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.