
தமிழக அரசின் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் ஜூலை 29 இன்றுடன் நிறைவடைவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. மறைந்த குடியரசு தலைவர் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பர் 5ஆம் தேதி ஒவ்வொரு வருடமும் ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் இந்த நாளில் சிறந்த ஆசிரியரை தேர்வு செய்து டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கிய தமிழக அரசு கௌரவித்து வருகிறது.
இந்த விருது பெறுபவர்களுக்கு ஆயிரம் ரூபாய் ரொக்கமும் வெள்ளி பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழும் வழங்கப்படும். அதன்படி நடப்பாண்டு மாநில நல்லாசிரியர் விருதுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்க ஜூலை 16ஆம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்ட நிலையில் தற்போது விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஜூலை 29 இன்றுடன் நிறைவடைவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.