பாகிஸ்தான் அணி டி20 மற்றும் ஒரு நாள் தொடர் விளையாடுவதற்காக நியூஸிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடுகிறது. இதில் முதலில் நடந்த டி20 நியூசிலாந்து அணியானது 4- 1 என்ற கணக்கில் கைப்பற்றியது. அதனை தொடர்ந்து ஒரு நாள் தொடரில் இரண்டு அணிகளும் விளையாடி வருகிறது. முதல் ஒருநாள் போட்டி நியூசிலாந்து அணி 73 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இந்த நிலையில் இரண்டு அணிகளுக்கு இடையே இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் இந்த போட்டியிலும் நியூசிலாந்து அணி எளிதாக வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

முதலில் விளையாடிய நியூஸிலாந்து அணி 291 ரன்களை எடுத்தது. அடுத்ததாக களமிறங்கிய பாகிஸ்தான் அணி நியூசிலாந்து அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. கடைசியில் 28 ரன்களில் பாகிஸ்தான் அணி ஆல் அவுட் ஆனது. இந்த போட்டியில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் ரிஸ்வான் 27 பந்துகள் மட்டுமே சந்தித்து 7 ரன்கள் எடுத்தார். இந்த நிலையில் அவருடைய ஆட்டம் குறித்து இந்திய ரசிகர்களின் பிரபல நடுவர் ரிச்சர்ட் கெட்டில்பரோ வீடியோ வெளியிட்டு கிண்டல் அடித்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.