டெல்லியில் உள்ள பிரபல கஃபே நிறுவனத்தின் சிஇஓ புனித் குரோனா (40). இவருக்கு திருமணம் ஆகி மணிகா என்ற மனைவி இருக்கும் நிலையில் இருவரும் விவாகரத்து பெற நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் மனைவி மற்றும் அவருடைய குடும்பத்தினர் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததால் கடந்த 31ஆம் தேதி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அதாவது இவர்கள் இருவரும் ஒரு பேக்கரி நடத்தி வைத்த நிலையில் விவாகரத்துக்கு பிறகு அது யாருக்கு சொந்தம் என்று இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகவும் இதனால் மாமியார் மற்றும் மனைவி இருவரும் தொடர்ந்து டார்ச்சர் கொடுத்ததாகவும் குடும்பத்தினர் குற்றசாட்டு தெரிவித்த நிலையில் இவர் இறப்பதற்கு முன்பாக பதிவு செய்த ஒரு 54 நிமிட வீடியோவை அவர் பதிவு செய்த நிலையில் அதில் ஒரு இரண்டு நிமிட வீடியோ மட்டும் இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த வீடியோவில், நான் என்னுடைய இறுதி வாக்குமூலத்தை பதிவு செய்கிறேன். என்னுடைய மனைவியும் மாமியாரும் தொடர்ந்து சித்திரவதை செய்கிறார்கள்.

நாங்கள் பரஸ்பர நிபந்தனைகளுடன் நீதிமன்றத்தில் விவாகரத்துக்கு விண்ணப்பித்து உள்ள நிலையில் அவர்களின் தொடர்ச்சியை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன். நாங்கள் நீதிமன்றத்தை மதித்து அந்த நிபந்தனைகளை 180 நாட்களுக்குள் நிறைவேற்ற வேண்டும். ஆனால்  என்னுடைய மனைவியும் மாமியாரும் புதிய நிபந்தனைகளை விதிக்கிறார்கள். ஏற்கனவே‌ 90 நாட்கள் கடந்துவிட்ட நிலையில் இன்னும் 90 நாட்கள் தான் இருக்கிறது. அவர்கள் என்னிடம் இன்னும் 10 லட்சம் வேண்டும் என்கிறார்கள். என்னால் என் பெற்றோரிடம் இதனை சொல்ல முடியாது. மேலும் ஏற்கனவே அவர்கள் என்னால் மிகுந்த கஷ்டத்தில் இருக்கிறார்கள் என்று அவர் கூறியுள்ளார். இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.