புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே பன்னீர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முருகேசன் என்ற 25 வயது மகன் இருந்துள்ளார். இந்த வாலிபர் நேற்று இரவு மழையூரில் தன்னுடைய பைக்கில் சென்று கொண்டிருந்தார். இவர் டாஸ்மாக் கடை அருகே சென்ற போது திடீரென மர்ம நபர்கள் சிலர் அவருடைய பைக்கை மறித்தனர்.

அந்த கும்பல் முருகேசன் அரிவாளால் சரமாரியாக வெட்டியதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியானார். இந்த சம்பவத்திற்கு பிறகு முருகேசனின் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் தற்போது 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடம் தீவிர விசாரணை நடைபெறுகிறது.