
தமிழ் நாட்டில் உள்ள மதுபான கடைகளில் மதுபானங்களின் விலையை அறிந்து கொள்ளும் விதமாக டிஜிட்டல் போர்டுகளை அமைக்க டாஸ்மாக் நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாகவும், மேலும் முதற்கட்டமாக ஒரு மாவட்டத்திற்கு 5 கடைகள் வீதம் 200 டாஸ்மாக் கடைகள் நவீனப்படுத்தப்பட உள்ளதாகவும் அமைச்சர் முத்துசாமி தெரிவித்திருந்தார். இந்த திட்டம் மூலம் மதுபானங்கள் விலையில் மோசடி செய்ய முடியாது என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில் டாஸ்மாக்கில் அனைவருக்கும் தெரியும்படி விலைப்பட்டியல் வைக்கப்பட்டுள்ளதா என மத்திய அரசின் வழக்கறிஞர்கள் குழு ஆய்வு நடத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. விலை பட்டியலை வைக்காத கடை ஊழியர்கள் மீது காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் மது பானம் கூடுதலாக ரூ.10க்கு விற்பனை செய்யப்படுவது தவிர்க்கப்படும் என தெரிகிறது.