தமிழகத்தில் கடந்த வருடம் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து தேர்வு நடந்து முடிந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் சமீபத்தில் நடந்து முடிந்தது. இந்நிலையில் விண்ணப்பதாரர்களுக்கு இறுதி வாய்ப்பாக இன்று முதல் ஜூன் ஏழாம் தேதி மாலை 5.45 மணிக்குள் விடுபட்ட அல்லது பிழையாக இருக்கும் சான்றிதழை சரியாக பதிவேற்றம் செய்ய வேண்டும் என டி என் பி எஸ் சி தேர்வு ஆணையம் அறிவித்துள்ளது.

விண்ணப்பதாரர்கள் தேர்வாணைய இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கும் இ சேவை மையத்தின் மூலமாக சரியான சான்றிதழை பதிவேற்றம் செய்ய வேண்டும் எனவும் குறிப்பிட்ட காலத்திற்குள் இதை செய்யாவிட்டால் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் எனவும் டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.